search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்பல்லோ நர்சு ஆஜர்"

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரி செவிலியர் சாமுண்டீஸ்வரி ஆஜர் ஆனார். #Jayalalithaa #JayaDeathProbe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.

    இதில் இதுவரைக்கும் 40-க்கும் மேற்பட்டாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தற்போது கடந்த 1 வாரமாக அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகளிடம் விசாரணை நடக்கிறது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியின் ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேஷ்குமார் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். இவர் போயஸ் கார்டனுக்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த ஜெயலலிதாவை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்தவர்.

    அன்றைய தினம் ஜெயலலிதா போயஸ் கார்டனில் எந்த நிலையில் இருந்தார் என்று இவர் ஆணையத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் இருந்த மற்றொரு செவிலியர் அனீஸ் நேற்று ஆணையத்தில் ஆஜராகி இருந்தார்.

    இன்று அனீஸ் மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவருடன் அப்பல்லோ ஆஸ்பத்திரி செவிலியர் சாமுண்டீஸ்வரியும் ஆஜர் ஆனார்.



    ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது அவர் எந்த நிலையில் இருந்தார். அவருடன் வந்தது யார்? என்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதில் அளித்தனர். இவர்கள் கொடுத்த விவரங்களும் அனைத்து வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. #Jayalalithaa #JayaDeathProbe

    ×